கம்பராமாயணம் 9903 · யுத்த 36.142

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அளக்க அரும் புள்ளினம் அடைய - எண்ண முடியாத கருடப் பறவைத் தொகுதி எல்லாம்; துளக்க அரும் வாய் தொறும் - அசைத்தற்கு இயலாத வாய்கள் தோறும்; ஆர் அழல் எரியைத் தொட்டன - பெருந் தீயையுமிழ்ந்தன; அவை இளக்க அரும் இலங்கை தீ இடுதும் - நெகிழாத இலங்கையை நெகிழ்விக்க நெருப்பையிடுவோம், ஈண்டு என - விரைவில் என்று; விண் எலாம் - விண்ணுலகத் தேவர் எல்லோரும்; விளக்கு இனம் எடுத்தன போன்ற - விளக்குகளின் தொகுதியை எடுத்தாற் போன்றிருந்தன. இளகாத இலங்கையைத் தீயால் இளக்கிப் பயன் கொள்ள நினைத்தது போன்று, கோபத்தால் வாயில் தீக்கக்கினவாம் கருடப் பறவைகள். அவை இலங்கை நகரைச் சுட்டுப் பொசுக்கத் தேவர்கள் கைப்பந்தம் கொண்டது போன்றிருந்தது எனச் சுவைபடக் கூறினார். விளக்கு - இங்கு தீப்பந்தம் குறித்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The countless flocks of birds, all of them, set blazing fire
  2. burning in every one of their unshakeable beaks,
  3. so that the whole sky looked as though it had taken up a host of lamps,
  4. saying, 'Here and now we will set fire to unyielding Ilaṅkai!'

What the poem says

The eagles of Garuḍa's weapon spit flame from their beaks in fury. The poet's fancy: the whole sky looks as if the gods had picked up torches, ready to set fire to the stubborn city of Ilaṅkai and melt it down.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aḷakka arum puḷ iṉam aṭaiya ār aḻal
tuḷakka arum vāytoṟum eriyat toṭṭaṉa,
‘iḷakka arum ilaṅkai tī iṭutum īṇṭu ‘eṉa
viḷakku iṉam eṭuttaṉa pōṉṟa viṇ elām.