கம்பராமாயணம் 9905 · யுத்த 36.144

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆயிடை அரக்கனும், அழன்ற நெஞ்சினன்,
தீயிடைப் பொடித்து எழும் உயிர்ப்பன், சீற்றத்தன்,
மா இரு ஞாலமும் விசும்பும் வைப்பு அறத்
தூயினன், சுடுசரம் உருமின் தோற்றத்த.

பொருள் · Meaning in Tamil

ஆயிடை - அப்போது, அரக்கனும் அழன்ற நெஞ்சினன் - இராவணனும் கொதிக்கும் நெஞ்சினன் ஆகி; தீயிடைப் பொடிந்து எழும் உயிர்ப்பன் - நெருப்புப் பொடியாகச் சிந்துகின்ற பெரு மூச்சுடையவனாய்; சீற்றத்தன் - வெகுளி மிக்கவனாய்; மா இரு ஞாலமும் விசும்பும் - மிக விரிந்த இந்த உலகமும் ஆகாயமும்; வைப்பு அற - இடமில்லையென்னும்படி; உருமின் தோற்றத்த - இடியைப் போன்று காட்சி தரும்; சுடுசரம் தூயினன் - சுடுகின்ற அம்புகளை வாரி வீசினான். இராவணன் அம்புகள் இடிபோன்று நிறைந்தன என்பதால், அவற்றின் விரைவும், ஒளியும், அழிக்கும் திறனும் உவமையால் பெற வைத்தார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that moment the rākṣasa too, his heart ablaze,
  2. his breath bursting out in sparks of fire, full of fury,
  3. so that the vast great earth and the sky had no room left,
  4. scattered burning arrows that looked like thunderbolts.

What the poem says

Seeing his serpent weapon destroyed, Irāvaṇaṉ seethes; his very breath throws out sparks. He showers burning arrows until there is no room left on earth or in the sky. Comparing them to thunderbolts conveys their speed, their brilliance and their power to destroy.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyiṭai arakkaṉum, aḻaṉṟa neñciṉaṉ,
tīyiṭaip poṭintu eḻum uyirppaṉ, cīṟṟattaṉ,
mā iru ñālamum vicumpum vaippu aṟat
tūyiṉaṉ, cuṭu caram urumiṉ tōṟṟatta.