கம்பராமாயணம் 9907 · யுத்த 36.146

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஒக்கநின்று எதிர் அமர் உடற்றும் காலையில்
முக்கணான் தடவரை எடுத்த மொய்ம்பற்கு
நெக்கன விஞ்சைகள் நிலையில் தீர்ந்தன;
மிக்கன இராமற்கு வலியும் வீரமும்.

பொருள் · Meaning in Tamil

ஒக்க நின்று - சரிசமமாக நின்று; எதிர் - எதிர்த்து; அமர் உடற்றும் காலையில் - போர்புரியும் போது; முக்கணான் தடவரை எடுத்த மொய்ம்பற்கு - சிவபெருமானது பெரிய கயிலை மலையைத் தூக்கிய தோள்களையுடைய வலிமை வாய்ந்த இராவணனுக்கு; விஞ்சைகள் - அவன் கற்று வைத்திருந்த மாய வித்தைகள்; நெக்கன - (நினைவுக்கு வரும் தன்மைகள்) நெகிழ்ந்தனவாயின; நிலையில் தீர்ந்தன - (ஆதலால்) அவற்றின் தெய்வத்தன்மைகள் அகன்று போயின; இராமற்கு வலியும் வீரமும் மிக்கன - இராம பிரானுக்கோ வல்லமையும் வீரத் தன்மையும் மிகத் தொடங்கின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As they fought on, standing face to face as equals,
  2. for the strong-armed one who had lifted the great mountain of the Three-eyed god,
  3. his magic arts grew loose and slipped from their place;
  4. while in Irāmaṉ, strength and valour grew.

What the poem says

The duel turns. Irāvaṇaṉ, who once lifted Kailāsa, the mountain of three-eyed Śiva, finds his magical knowledge failing him: the spells will not come to mind and lose their power. Irāmaṉ's strength and courage, meanwhile, keep growing.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1okka niṉṟu etir amar uṭaṟṟum kālaiyil
mukkaṇāṉ taṭa varai eṭutta moympaṟku
nekkaṉa viñcaikaḷ nilaiyiṉ tīrntaṉa;
mikkaṉa irāmaṟku valiyum vīramum.