கம்பராமாயணம் 9908 · யுத்த 36.147
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வேதியர் வேதத்து மெய்யன் - வேதம் வல்லோர் ஓதுகின்ற வேதத்தின் உண்மைப் பொருளாயிருக்கும் இராமபிரான்; வெய்யவர்க்கு ஆதியன் - கொடியவர்கட்கெல்லாம் முதல்வனாயிருக்கும் இராவணனுக்கு; அணுகிய அற்றம் நோக்கினான் - (இராவணன் தலையைக் கொய்ய இதுவே) ஏற்ற சமயம் என்று உணர்ந்து; சாதியின் நிமிர்ந்த ஓர் தலையை - அவன் தலைக் கூட்டத்தில் சிறந்த ஒரு தலையை; பாதியின் மதி முகப்பகழி ஒன்றினால் - அர்த்தசந்திரக்கணை ஒன்றால்; தள்ளினான் - (அறுத்து நிலத்தில்) வீழ்த்தினான்.
அரக்க சாதியின் ஆணவம் மிக்க தலைவன் ஆதலின் 'சாதியின் நிமிர்ந்தோன் தலை' என்றார் எனினுமாம். இராவணனுக்குச் சாதியால் வந்த செருக்கு உண்டு என்பதனை "சாதியால் வந்த சிறு நெறியறியான் என் தம்பி" (கம்ப. 7625) என வீடணனைக் கூறுமாற்றலால் கும்பகர்ணன் கூறியுள்ளமையைக் கொண்டு உணர்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He who is the truth of the Vedas of the Vedic seers
- saw that the moment of weakness had come for the first among the cruel,
- and he struck down one head that stood out among its kind
- with a single arrow whose head was a half-moon.
What the poem says
Irāmaṉ, the truth the Vedas speak of, sees his opening and with a crescent-headed arrow cuts off one of Irāvaṇaṉ's heads, the proudest of them.
The phrase can also mean 'the head of him who stood proudest in his race'. The commentary recalls that Kumpakaruṇaṉ once spoke of the rākṣasas' pride of birth, saying that Vīṭaṇaṉ, unlike the others, did not know that narrow way.