கம்பராமாயணம் 9913 · யுத்த 36.152

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இடந்தது கிரி குவடு என்ன எங்கணும்
படர்ந்தது குரைகடல் பருகும் பண்பது
விடம்தரு விழியது முழுகி வேலையில்
கிடந்ததும் ஆர்த்தது மழையின் கேழது.

பொருள் · Meaning in Tamil

விடம் தரு விழியது - நஞ்சைக் கக்குகின்ற கண்களையுடையதாக; முடுகி - விரைந்து; வேலையில் கிடந்ததும் - கடலிற் கிடந்ததான தலையும்; கிரிகுவடு இடந்தது என்ன - மலைச்சிகரம் குத்தி எடுக்கப்பட்டது என்னுமாறு; எங்கணும் படர்ந்தது - எங்கும் சென்றதாகி; மழையின் கேழது - மேகத்தின் நிறத்தைக் கொண்டு; குரை கடல் - ஒலிக்கின்ற கடலின் நீரை; பருகும் பண்பது - பருகுகின்ற தன்மையதாம்; ஆர்த்தது - ஆரவாரித்தது.

மேகம் கடல்நீரை உண்ணும் தன்மையது எனும் புராண மரபு பற்றி, இராவணன் தலையை மேகமாக்கி, கடல் நீரினை அது உண்டு ஆர்ப்பரித்தது என்றார்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like a mountain peak torn out, it spread everywhere,
  2. of a nature to drink up the roaring sea,
  3. with eyes that poured out poison; and swiftly the head
  4. that lay in the ocean roared too, the colour of a rain-cloud.

What the poem says

Even the head that fell into the sea comes alive. Dark as a rain-cloud, its eyes spitting venom, it looms everywhere like a mountain peak wrenched from its place, and it roars as it seems to drink the ocean.

The image draws on the traditional belief that clouds drink up seawater before they rain: the head is pictured as a cloud swallowing the sea.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṭantatu kirik kuvaṭu eṉṉa eṅkaṇum
paṭarntatu kurai kaṭal parukum paṇpatu
viṭam taru viḻiyatu muṭuki vēlaiyil
kiṭantatum ārttatu maḻaiyiṉ kēḻatu.