கம்பராமாயணம் 9914 · யுத்த 36.153

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அசனி ஏறு அயிர்க்கும் ஆர்ப்பினான் - பேரிடியும் அஞ்சக் கூடியவாறு ஆர்ப்பரிக்கின்ற இராவணன்; சிரம் விழுத்தினன் எனும் வெகுளி மீக்கொள - தன் தலையை (இராமன்) வீழ்த்திவிட்டான் என்கின்ற வெகுளி மேல் ஓங்கி; வழுத்தினன் - (யாவரும்) போற்றுமாறு; உயிர்களின் முதலில் - உயிர் எழுத்துக்களின் முதலிலே; வைத்த ஓர் எழுத்தினன் தோள்களில் - வைக்கப் பட்டுள்ள ஒப்பற்ற எழுத்தாகிய அகர வடிவினனான இராமபிரானுடைய தோள்களில்; ஏழொடு ஏழு கோல் அழுத்தினான் - பதினான்கு சரங்களைப் பதித்தான்.

"எழுத்துகளில் நான் அகரமாக இருக்கிறேன்" என்பது "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" என்று வள்ளுவனார் வாக்கும் நோக்குக. (குறள்: 1) "அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி, நாத மாத்திரையாகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை, செயற்கையுணர்வானன்றி, இயற்கையுணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க" என்ற இக்குறளுக்குப் பரிமேலழகர் உரைத்த நயவுரையும் இங்கு நினைத்தற்குரியது. இராமன் அகார வாச்சியனான மூல முதற் பொருளே என மீண்டும் நினைப்பித்தவாறு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As rage at 'He has struck down my head!' rose high in him,
  2. into the shoulders of him who is the one letter, praised by all,
  3. set first among the vowels, the 'living' letters, seven and seven arrows
  4. he drove, he whose roar makes even the thunderbolt afraid.

What the poem says

Enraged that a head of his has been cut off, Irāvaṇaṉ, whose roar frightens thunder, drives fourteen arrows into Irāmaṉ's shoulders.

Irāmaṉ is called 'the one letter placed first among the vowels', that is, the sound a, which begins the alphabet. In Tamil the vowels are 'life letters' (uyir), so the phrase also means first among living beings. This echoes the Bhagavad Gītā ('among letters I am a') and the opening couplet of the Tirukkuṟaḷ, which says that as a is first of all letters, the primal God is first of the world.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘viḻuttiṉaṉ ciram ‘eṉum vekuḷi mīkkoḷa,
vaḻuttiṉa, uyirkaḷiṉ mutaliṉ vaitta ōr
eḻuttiṉaṉ tōḷkaḷiṉ ēḻoṭu ēḻu kōl
aḻuttiṉaṉ acaṉi ēṟu ayirkkum ārppiṉāṉ.