கம்பராமாயணம் 9916 · யுத்த 36.155

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கொற்றவன் சரம்படக் குறைந்துபோன கை
பற்றியே கிடந்தது சிலையைப் பாங்குற
மற்று ஒர் கைப் பிடித்தது போல வவ்வியது
அற்றகைப் பிறந்தகை யார் அது ஓர்குவார்.

பொருள் · Meaning in Tamil

கொற்ற வெம் சரம் பட - (இராமபிரானுடைய) வெற்றி மிகுந்த கொடிய அம்பு பட்டதனால்; குறைந்து போன கை - வெட்டப்பட்டு விட்ட கை; பற்றிய கிடந்தது சிலையை - பற்றிக் கிடந்த வில்லை; பாங்குற மற்று ஓர் கை பிடித்தது போல - (கீழே விழுமுன்) மற்றொரு கை அழகாகப் பற்றிக் கொண்டது போல; வவ்வியது - (புதிதாக முளைத்த உடனே) பிடித்துக் கொண்டது; அற்ற கை பிறந்த கை - அறுக்கப்பட்ட கை மீண்டும் முளைத்து விட்டதை; யார் அது ஓர்குவார்? - (முளைத்த விரைவினால்) யாரும் அறிய இயலவில்லை?

பிறந்த கை எனும் பாடம் கொள்ளப்பெற்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The bow held by the hand cut short when the victorious fierce arrow struck
  2. was seized, neatly, as if another hand
  3. had caught it as it lay; the hand cut off, the hand born again —
  4. who could even perceive it?

What the poem says

The severed arm grows back so fast that the new hand catches the bow before it can fall, as if someone else had grabbed it. The loss and the regrowth happen so quickly that no one could tell they had happened at all.

The commentary notes that it follows the reading 'piṟanta kai', 'the hand that was born'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1koṟṟa veñ caram paṭak kuṟaintu pōṉa kai
paṟṟiya kiṭantatu cilaiyaip pāṅkuṟa
maṟṟu ōr kaip piṭittatu pōla vavviyatu
aṟṟa kaip piṟanta kai yār atu ōrkuvār.