கம்பராமாயணம் 9920 · யுத்த 36.159

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘மாண்டது இன்றொடு மாதலி வாழ்வு ‘என
மூண்ட வெந் தழல் சிந்தி முடுகலும்
ஆண்ட வில்லி ஓர் ஐம்முக வெங்கணை
தூண்டினான்; துகள் ஆனது தோமரம்.

பொருள் · Meaning in Tamil

மாதலி வாழ்வு இன்றோடு மாண்டது - மாதலியின் வாழ்க்கை இன்றோடு முடிந்தது; என - என்னும்படி; மூண்ட வெந்தழல் சிந்த முடுக்கலும் - மூட்டிய கொடுந்தழலைச் சிந்திக்கொண்டு (தோமரப் படையை) விரைந்து இராவணன் விடுத்தபோது; ஆண்ட வில்லி - யாவரையும் ஆட்கொள்பவனும் கோதண்டம் எனும் பெயருடைய வில்லையுடையவனுமாகிய இராமபிரான்; ஓர் ஐம்முக வெங்கணை தூண்டினான் - ஒப்பற்ற ஐந்து முகங்களையுடைய கொடிய அம்பினைச் செலுத்தினான்; துகள் ஆனது தோமரம் - பொடிப் பொடியாய்ப்போனது அந்தத் தோமரப்படை.

ஆண்ட வில்லி - தம்மை ஆட்கொண்ட வில்லி எனக் கவிஞர் பிரான் அன்பின் மிகுதியால் கூறினதுமாம். "என்னை யாளுடைய ஐயன்" (கம்ப 204) என்பார் முன்னும். ஐம்முக வெங்கணை பாசுபதாத்திரம். சிவனுக்கு ஐம்முகன் எனும் பெயருண்டாதலின்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As, so that one would say 'Mātali's life ends today,'
  2. it rushed on, scattering kindled fierce flame,
  3. the Archer who rules us loosed a single fierce five-faced arrow,
  4. and the lance was turned to dust.

What the poem says

The lance flies at Mātali trailing fire, as if his life is about to end. Irāmaṉ fires a five-headed arrow, identified by the commentary as the Pāśupata, the weapon of Śiva, who is called the five-faced. The lance is reduced to dust.

'The Archer who rules' may also be read as the poet's affectionate 'the Archer who has made me his own', as elsewhere Kampaṉ calls Irāmaṉ 'my Lord who owns me'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘māṇṭatu iṉṟoṭu mātali vāḻvu ‘eṉa
mūṇṭa ven taḻal cinta muṭukkalum
āṇṭa villi ōr aim muka veṅ kaṇai
tūṇṭiṉāṉ; tukaḷāṉatu tōmaram.