கம்பராமாயணம் 9921 · யுத்த 36.160

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஓய்வு அகன்றது ஒருதலை நூறு உற
போய் அகன்று புரள பொருகணை
ஆயிரம் தொடுத்தான் அறிவின் தனி
நாயகன் கைக் கடுமை நடத்துவான்.

பொருள் · Meaning in Tamil

அறிவின் தனி நாயகன் - ஞானத்தின் ஒப்பற்ற தலைவன் ஆகிய இராமபிரான்; கை கடுமை நடத்தி - (தனது) கையில் வேகத்தைச் செலுத்தி; ஓய்வு அகன்று - ஒழிவில்லாமல்; ஒருதலை நூறு உற - ஒரு தலை நூறு தலைகளாக முளைக்கவும்; அகன்று போய் - (அவையனைத்தும்) வெகு தொலையிற்போய்; புரளப் பொருகணை ஆயிரம் தொடுத்தான் - புரளுமாறு போர் அம்புகள் ஆயிரம் விடுத்தான்.

உயிர்கட்கும் அறிவு உண்டாயினும், உயிரின் அறிவு மாசடையும் குறையறிவாதலாலும், இறைவனின் அறிவே வாலறிவும் நிறையறிவும் ஆதலாலும் "அறிவின் தனி நாயகன்" என இராமபிரான் குறிக்கப் பெற்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Without a pause, so that each single head became a hundred
  2. and went rolling far away, a thousand battle arrows
  3. he loosed — the one Lord of wisdom,
  4. driving his hand at fierce speed.

What the poem says

Irāmaṉ, now shooting without a pause, looses a thousand arrows. Heads are cut off and grow back so many times that each one seems to become a hundred, and they go rolling far across the field.

He is called 'the one Lord of wisdom' because, as the commentary explains, the knowledge of embodied souls is partial and clouded, while God's knowledge alone is pure and complete.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ōyvu akaṉṟatu oru talai nūṟu uṟa
pōy akaṉṟu puraḷa poru kaṇai
āyiram toṭuttāṉ aṟiviṉ taṉi
nāyakaṉ kaik kaṭumai naṭattiyē.