கம்பராமாயணம் 9932 · யுத்த 36.171
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இமையோர்களை உய்திறம் துணிந்தான் - தேவர்களைக் காக்கத் துணிவு கொண்டவனாய் அவதரித்த இராமபிரான்; கை துறந்த படையினன் - கையிலிருந்து நழுவிய படைக்கலத்தை யுடையவனாய்; கண் அகல் மெய் துறந்த உணர்வினன் - இடம் விரிந்த உடம்பில் உணர்ச்சியற்ற வனாய் உள்ள இராவணன்; வீழ்தலும் - (தேரின் மேல் மயங்கி) வீழ்ந்தவுடன்; அறம் உன்னுவான் - போர் அறத்தை நினைவு கொண்டவனான இராமபிரான்; எய்திறம் தவிர்ந்தான் - அம்பு விடுக்கும் செயலை நிறுத்தி விட்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When he fell, his weapons slipped from his hands,
- consciousness gone from his vast body,
- he stopped shooting — he who had resolved to save
- the immortals, he who keeps dharma in mind.
What the poem says
Irāvaṇaṉ has collapsed, his weapons fallen from his hands and his huge body senseless. Irāmaṉ, who took birth to rescue the gods, stops shooting at once, because the code of righteous war forbids striking a helpless enemy.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kai tuṟanta paṭaiyiṉaṉ kaṇ akal
mey tuṟanta uṇarviṉaṉ vīḻtalum
ey tiṟam tavirntāṉ imaiyōrkaḷai
uy tiṟam tuṇintāṉ aṟam uṉṉuvāṉ.