கம்பராமாயணம் 9933 · யுத்த 36.172

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘தேறினால் பின்னை யாதும் செயற்கு அரிது;
ஊறு தான் உற்ற போழ்தே உயிர்தனை
நூறுவாய் ‘என மாதலி நூக்கினான்;
ஏறு சேவகனும் இது இயம்பினான்.

பொருள் · Meaning in Tamil

மாதலி - மாதலியாகிய இராமனின் சாரதி (அப்போது); தேறினால் பின்னை யாதும் செயற்கு அரிது - இராவணன் (மூர்ச்சை) தெளிந்தால், பிறகு அவனை ஒன்றும் செய்தல் கூடாது; ஊறு தான் உற்ற போதே - (ஆதலால்) அவன் இடையூறு அடைந்துள்ள போதே; உயிர்தனை நூறுவாய் - அவன் உயிரை அழித்திடுவாயாக; என நூக்கினான் - என்று (இராமனை) தூண்டினான்; ஏறு சேவகனும் இது இயம்பினான் - சிங்க ஏறு போன்ற இராமபிரானும் பின்வருமாறு கூறினான்.

அரிது - இன்மை மேற்று. மனக்கவலை மாற்றல் அரிது. (குறள்.7) என்புழிப்போல.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Once he recovers, nothing more can be done against him;
  2. while he lies wounded, now,
  3. destroy his life!' — so Mātali urged;
  4. and the lion-like warrior said this in reply.

What the poem says

Mātali presses Irāmaṉ to finish Irāvaṇaṉ off now, while he is helpless, because once he comes round there will be no defeating him. Irāmaṉ, the warrior bold as a lion, answers in the next verse.

The commentary notes that 'arītu' here means 'impossible', as in a couplet of the Tirukkuṟaḷ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘tēṟiṉāl piṉṉai yātum ceyaṟku aritu;
ūṟutāṉ uṟṟapōtē uyirtaṉai
nūṟuvāy ‘eṉa mātali nūkkiṉāṉ;
ēṟu cēvakaṉum itu iyampiṉāṉ.