கம்பராமாயணம் 9934 · யுத்த 36.173
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘படைதுறந்து மயங்கிய பண்பினோன்
இடை பெறும் துயர் பார்த்து இகல்நீதியின்
நடைதுறந்து உயிர்கோடலும் நன்மையோ?
கடைதுறந்தது போர் என்கருத்து ‘என்றான்.
பொருள் · Meaning in Tamil
படை துறந்து மயங்கிய பண்பினான் இடை - போர்க் கருவிகளைக் கைவிட்டு, நினைவிழந்து கிடக்கின்ற தன்மை உள்ளவனிடத்தில்; பெறும்துயர் பார்த்து - அழிக்கக்கூடிய துன்பம் உண்டாயிருப்பதைப் பார்த்து; இகல் நீதியின் நடைதுறந்து - போர் நீதியின் ஒழுக்கத்திலிருந்து விலக; உயிர் கோடலும் நன்மையோ? - உயிரைக் கொள்வதும் அறம் ஆகுமோ? என் கருத்து - என்னுடைய கருத்தின்படி; கடை துறந்தது போர் - கடைப்பட்ட பண்புகளிலிருந்து விலகுவதுதான் (தூய) போர் நெறியாகும்; என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'He has let go his weapons and lies in a swoon;
- to watch for the distress that has come upon him and,
- abandoning the code of just war, to take his life — is that good?
- To my mind, true battle has left all baseness behind,' he said.
What the poem says
Irāmaṉ refuses. To take advantage of an enemy who has dropped his weapons and fainted, abandoning the ethics of war to kill him, would not be right. In his view, true warfare means rejecting everything base.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘paṭai tuṟantu mayaṅkiya paṇpiṉāṉ
iṭai peṟum tuyar pārttu ikal nītiyiṉ
naṭai tuṟantu uyir kōṭalum naṉmaiyō?
kaṭai tuṟantatu pōr eṉ karuttu ‘eṉṟāṉ.