கம்பராமாயணம் 9940 · யுத்த 36.179

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆண்தொழில் துணிவு ஓய்ந்தனை; ஆங்கு இறை
ஈண்ட நிற்றிடின், ஐயனே! நின் உயிர்
மாண்டது இக்கணம் என்று, இடர் மாற்றுவான்,
மீண்டது இத்தொழில், எம் வினை; மெய்ம்மையால்.

பொருள் · Meaning in Tamil

ஐயனே! - தலைவனே! ஆண் தொழில் துணிவு ஓய்ந்தனை - வீரச் செறிவு புரியும் துணிவு உன்னிடம் தளர்ந்தது; ஆண்டு இறை ஈண்ட நின்றிடின் - அந்த இடத்தில் அருகிருந்திருந்தால்; நின்னுயிர் அக்கணம் மாண்டது என்று - உன்னுயிர் அந்தக் கணம் மடிந்தொழிந்து விடும் என்று கருதி; இடர் மாற்றுவான் - (உனக்கு வரவிருந்த) துன்பத்தை மாற்ற வேண்டி; மீண்டது இத் தொழில் - தேரை மீட்டுக்கொண்டு வரும் இச்செயலை நான் செய்தது; எம்வினை மெய்ம்மை - எம் செயல் (என்றும்) உண்மையாவதேயாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Your courage for manly deeds had failed you; had you stayed there
  2. even a moment longer, my lord, your life
  3. would have perished that very instant — so, to ward off harm,
  4. this act of turning back was done; our deed was done in truth.'

What the poem says

The charioteer explains: Irāvaṇaṉ had lost the strength to fight, and if the chariot had stayed there even a moment longer he would have been killed. Turning back was done to save his life, and was done in loyalty.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṇtoḻil tuṇivu ōyntaṉai; āṇṭu iṟai
īṇṭa niṉṟiṭiṉ, aiyaṉē! niṉ uyir
māṇṭatu ik kaṇam eṉṟu, iṭar māṟṟuvāṉ,
mīṇṭatu it toḻil, em viṉai; meymmaiyāl.