கம்பராமாயணம் 9948 · யுத்த 36.187
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
திசையானையின் மருப்பு உலக்க வழங்கிய மார்பினான் - எட்டுத் திக்கு யானைகளின் தந்தங்களும் ஒடியுமாறு, தன் மார்பினைக் காட்டிய இராவணன்; திரு புலக்க - (இராமன் மார்பில் அகலாது வாழும்) திருமகளும் புலந்து சிறிது அப்பால் (மார்பை) விட்டு ஒதுங்குமாறு; இரும்பு உலக்கை, வேல், தண்டு, கோல், ஈட்டி, வாள் - இரும்பால் ஆன உலக்கை, வேல் கதை, குத்துக்கோல், ஈட்டி, வாள்; நெருப்பு உலக்க வரும் கப்பணம் - தீயைச் சிந்தி வரும் கப்பணம் ஆகிய படைக்கருவிகளையும், உய்த்தான் - (இராமன் மேல்) செலுத்தினான்.
திரிபணி என்னும் சொல்லணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Iron pestles, spears, maces, goads, lances, swords,
- and long caltrops that came spitting out fire,
- he hurled, so that even the goddess of fortune flinched — he whose chest
- he had offered so that the tusks of the elephants of the directions broke on it.
What the poem says
Irāvaṇaṉ, whose chest once broke the tusks of the elephants of the directions, flings a barrage of iron pestles, spears, maces, goads, lances, swords and fiery caltrops at Irāmaṉ. They fly so thick that even Śrī, the goddess of fortune who lives on Irāmaṉ's chest, shrinks back.
The verse uses tiripu, a figure in which the opening syllables of each line differ only in their first letter (irup-pulakkai, tirup-pulakka, marup-pulakka).