கம்பராமாயணம் 9951 · யுத்த 36.190
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘நாரணன் திரு உந்தியில் நான்முகன்
பார வெம்படை வாங்கி இப் பாதகன்
மாரின் எய்வென் ‘என்று எண்ணி வலித்தனன்
ஆரியன் அவன் ஆவி அகற்றுவான்.
பொருள் · Meaning in Tamil
ஆரியன் - இராமபிரான்; அவன் ஆவி அகற்றுவான் - இராவணனுடைய உயிரைப் போக்கக் கருதி; நாரணன் - நாராயணனுடைய; திருஉந்தியில் நான்முகன் - நாபிக் கமலத்தே தோன்றிய நான்முகமுடைய பிரம்மாவின்; பார வெம்படை வாங்கு - பெருமை மிக்க கொடிய அம்பை எடுத்து; இப்பாதகன் மாரின் எய்வென் - இந்தப் பாவியினுடைய மார்பில் பாய்ச்சுவேன்; என்று எண்ணி வலித்தான் - என்று கருதி, அக்கருத்திலே உறுதி கொண்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Taking the mighty, fierce weapon of the Four-faced one
- born from the sacred navel of Nāraṇaṉ,
- I shall shoot it into this sinner's chest,' he thought, and he was resolved —
- the noble one, intent on taking his life.
What the poem says
Irāmaṉ makes his decision: to kill Irāvaṇaṉ he will use the Brahmāstra, the supreme weapon of Brahmā, the four-faced god born from the lotus in Viṣṇu's navel, and drive it into the sinner's chest.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘nāraṇaṉ tiru untiyil nāṉmukaṉ
pāra vem paṭai vāṅku ip pātakaṉ
māriṉ eyveṉ ‘eṉṟu eṇṇi valittaṉaṉ
āriyaṉ avaṉ āvi akaṟṟuvāṉ.