கம்பராமாயணம் 9953 · யுத்த 36.192

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1புரம் சுடப் பண்டு அமைத்தது பொன் பணை
மரம் துளைத்தது வாலியை மாய்த்துளது
அரம் சுடச்சுடர் அம்பது அவ் ஆற்றலான்
உரம் சுடச் சுடரோன்மகன் உந்தினான்.

பொருள் · Meaning in Tamil

புரம் சுடப் பண்டு அமைந்தது - சிவபெருமான் முப்புரத்தை எரிக்க அமைக்கப் பெற்றதும்; பொன் பணைமரம் துளைத்தது - அழகிய கிளைகள் கொண்ட மராமரத்தைத் துளைக்க இராமபிரான் பயன்படுத்தியதும், வாலியை மாய்த்துளது - இராமபிரான் வாலியை மடிக்க எடுத்ததும் ஆகிய அந்தப் பிரம்மாத்திரத்தை; அரம் சுட - அரமானது தாக்க; சுடர் நெஞ்சின் அரக்கர்கோன் - மேலும் சுடர் விடும் தீச்சுடர் போன்று (துன்பம் தாக்கவும் துவளாத) நெஞ்சினையுடைய அரக்கர்களின் தலைவனான இராவணனது; உரம் சுட - மார்பினைத் தாக்கும் வண்ணம்; சுடரோன் மகன் உந்தினான் - சூரிய குலத்து மகனான இராமபிரான் செலுத்தினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The weapon made long ago to burn the Cities, which pierced
  2. the trees with golden branches, which slew Vālī —
  3. to burn the chest of the king of the rākṣasas, whose heart only blazes brighter when the file bites,
  4. the son of the Sun's line sent it flying.

What the poem says

Irāmaṉ, of the solar dynasty, releases the weapon. It has a history: it was made long ago for Śiva's burning of the three flying cities of the demons, Irāmaṉ used it to pierce the seven sal trees, and it killed Vālī.

Irāvaṇaṉ's heart is compared to metal that only shines brighter the more the file is applied: hardship never breaks him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1puram cuṭap paṇṭu amaittatu poṉ paṇai
maram tuḷaittatu vāliyai māyttuḷatu
aram cuṭac cuṭar neñciṉ arakkar kōṉ
uram cuṭac cuṭarōṉ makaṉ untiṉāṉ.