கம்பராமாயணம் 9955 · யுத்த 36.194
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆழி மால்வரைக்கு அப்புறத்து அப்புறம்
பாழி மால்கடலும் ஒளி பாய்ந்ததால்
ஊழி ஞாயிறு மின்மினி ஒப்புறும்
வாழி வெஞ்சுடர் பேர் இருள் வாரவே.
பொருள் · Meaning in Tamil
வெம்சுடர் - அந்தப் பிரம்மாத்திரத்தின் கொடிய ஒளி; பேர் இருள் வார - பேரிருளை அகற்றி, ஊழி ஞாயிறும் - ஊழிக் காலத்து சூரியனும்; மின்மினி ஒப்புற - மின்மினி என்னுமாறு; மால் ஆழி வரை - பெரிய சக்கரவாள கிரிக்கு; அப்புறத்து - அப்புறத்தே உள்ள; அப்புறம் பாழிமாக் கடலும் - நீர் நிறைந்த வலிய பெருங் கடலுக்கும்; வெளிப்பாய்ந்தது - வெளியே பாய்ந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Beyond, and beyond again, the great ring of mountains,
- beyond the mighty great ocean it leapt out into space,
- so that the sun at the end of the age seemed a firefly,
- its fierce glorious radiance sweeping the great darkness away.
What the poem says
The light of the Brahmāstra blazes out past the Cakkaravāḷam, the ring of mountains thought to enclose the world, and past the great ocean beyond it. It drives away all darkness, and beside it even the sun that burns at the end of time looks like a firefly.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āḻi māl varaikku appuṟattu appuṟam
pāḻi mā kaṭalum veḷi pāyntatāl
ūḻi ñāyiṟu miṉmiṉi oppuṟa
vāḻi veñ cuṭar pēr iruḷ vāravē.