கம்பராமாயணம் 9956 · யுத்த 36.195
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1அக்கணத்தின் அயன்படை ஆண்தகை
சக்கரப் படையோடும் தழீஇச் சென்று
புக்கது அக்கொடியோன் உரம்; பூமியும்
திக்கு அனைத்தும் விசும்பும் திரியவே.
பொருள் · Meaning in Tamil
அக்கணத்தின் - அந்தக் கணத்தில்; அயன் படை - அந்தப் பிரம்மாத்திரம்; ஆண்தகை சக்கரப் படையோடும் - ஆண்களிற் சிறந்த குணங் கொண்டவனான இராமபிரானின் ஆழிப்படையுடனே; தழீஇச் சென்று - தழுவிப் போய்; அக்கொடியோன் - அந்தக் கொடியவன் இராவணனுடைய, உரம் புக்கது - மார்பில் நுழைந்தது; பூமியும் திக்கு அனைத்தும் - (அப்போது) பூமியும் திக்குகள் அனைத்தும்; விசும்பும் திரிந்த - விண்ணுலகும் நிலை கலங்கின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In that instant Ayaṉ's weapon, joined together
- with the discus weapon of the noblest of men,
- went and entered the chest of that cruel one; the earth,
- all the directions and the sky were shaken.
What the poem says
At that moment Brahmā's weapon, together with the discus of Irāmaṉ (Viṣṇu's weapon), strikes Irāvaṇaṉ and enters his chest. Earth, sky and all the directions reel with the shock.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ak kaṇattiṉ ayaṉ paṭai āṇtakai
cakkarap paṭaiyōṭum taḻīic ceṉṟu
pukkatu ak koṭiyōṉ uram; pūmiyum
tikku aṉaittum vicumpum tirintavē.