கம்பராமாயணம் 9957 · யுத்த 36.196
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இராகவன் தன் புனித வாளி - இராமபிரான் செலுத்திய தூய்மை நிறைந்த பிரம்மாத்திரம்; முக்கோடி வாணாளும் - (இராவணனுடைய) மூன்று கோடி ஆயுளையும்; முயன்றுடைய பெருந்தவமும் - முயன்று பெற்றிருந்த பெருந்தவப் பயனையும்; முதல்வன் - தேவர்களில் ஒருவனான நான்முகன்; முன் நாள் - முன் காலத்தில்; எக்கோடி யாராலும் - (முப்பத்து முக்கோடி தேவர்களில்) எந்த வரிசையைச் சேர்ந்தோர் ஆனாலும் அவர்களால்; வெலப்படாய் - நீ வெல்லப்பட மாட்டாய்; எனக் கொடுத்த வரமும் - என்று தந்த வரத்தையும்; ஏனைத் திக்கோடும் உலகு அனைத்தும் - மற்றும் திசைகளையும், உலகங்கள் எவற்றையும், செருக்கடந்த புயவலியும் - போரால் வென்ற தோள் ஆற்றலையும்; தின்று - உண்டு விட்டு; மார்பில் புக்கு - (இராவணனுடைய) மார்பில் நுழைந்து; ஓடி - உடல் எங்கும் சுழன்று; உயிர் பருகி - உயிரைப் பருகிவிட்டு; புறம் போயிற்று - வெளியே சென்றது.
இராவணன் பல்லாண்டுகள் கடுந்தவம் இயற்றி, ஒவ்வொரு தலையாக அறுத்து ஒன்பது தலைகளை ஆகுதியில் இட்டுப் பெற்ற தவப்பயன்கள் அவையாதலின் "முயன்றுடைய பெருந்தவம்" என்றார். பார்க்க (உத்தர. இராவணன் பிறப்பு. 209)
சிவபிரானிடம் மூன்றரைக் கோடி ஆயுள் பெற்றான் இராவணன் என்றறிந்த திருமால் முனிவன் வடிவெடுத்து, மூன்றரைக் கோடியாகாது அரைகுறையென்பார்கள். முன்பு பெற்ற மூன்றரைக் கோடி ஒழிய, அரைக்கோடி கேள் என்றான். அப்படியே நான்முகன் பெற்ற மூன்றரைக்கோடி ஆயுள் ஒழிய இப்போது அரைக்கோடி கொடு என இராவணன் கேட்க அப்படியே ஆகுக என்றான் சிவபிரான். "முன்னம் மூன்றரைக் கோடியு மொழிய நீ முதல்வ, இன்னம் ஓரரைக் கோடி நாள் ஈந்தருள் என்ன மன்னும் மாசுணப் பாயலான் மாயம் ஈது என்னா, உன்னும் மாமலை மகளுடன் உமாபதி நகைத்தே அன்னவாறு அரைக் கோடியே யளித்தனம்" என்பது உத்தரகாண்டம். (வரையெடுத்த 79-82) இராவணன் பெற்ற ஆயுளில் அரைக்கோடியே வாழ்ந்தான். மூன்று கோடியாயுளும் ஒழிந்தது. மீண்டும் பெற்ற வரத்தால் ஆதலின் "முக்கோடி வாழ்நாளும்" என்றார். இதனாலேயே, "அரைகடையிட்டு அமைவுற்ற முக்கோடி ஆயுளும்" (கம்ப. 9944) என்று பின்னும் கூறுவார் அரைகடையிட்டு அமைவுற்ற முக்கோடி யாயுளும் எனற்கு, கடைசியில் அரைக்கோடியே இராவணனுக்கு அமைவுற்றது. 3 கோடியாயுளும் இராவணன் மீண்டும் கேட்ட வரத்தால் இப்போது
ஆங்கிலம் · English translationAI
Translation
- His life-span of three crores of years, the great penance he had laboured to win, the boon
- the First One gave him long ago — 'You shall not be conquered by any of the crores of gods' — and
- the might of his arms that had conquered in war every direction and all the worlds: devouring all these, entering his chest,
- racing through him and drinking his life, Irākavaṉ's holy arrow passed out the other side.
What the poem says
This is the moment of Irāvaṇaṉ's death. Irāmaṉ's sacred arrow 'eats up' everything that made him invincible: a life-span of three crores of years, the fruit of his fierce austerities, Brahmā's boon that none of the gods could defeat him, and the strength of arms that had conquered every quarter of the world. It enters his chest, drinks his life, and comes out the other side.
The commentary recalls the legend that Irāvaṇaṉ won his boons by cutting off nine of his heads one by one and offering them into the sacrificial fire. It also tells how he was tricked into giving up most of his promised life-span for a smaller one, which is why the poet speaks of the 'three crores' as already lost.