கம்பராமாயணம் 9958 · யுத்த 36.197

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆர்க்கின்ற வானவரும், அந்தணரும், முனிவர்களும், ஆசிகூறித்
தூர்க்கின்ற மலர்மாரி தொடரப்போய், பாற்கடலில் தூய்நீர் ஆடி,
தேர் குன்றம் இராவணன்தன் செழுங்குருதிப் பெரும்பரவைத் திரைமேல் சென்று,
கார்க்குன்றம் அனையான்தன் கடுங்கணைப் புட்டிலின் நடுவண் கரந்தது அம்ம

பொருள் · Meaning in Tamil

ஆர்க்கின்ற வானவரும், அந்தணரும், முனிவர்களும் - இராவண வதத்தால் எழுந்த உவகை மிகுதியால் ஆரவாரம் செய்கின்ற தேவர்களும் அந்தணாளர்களும் முனிவர்களும்; ஆசி கூறி - ஆசிகள் கூறி; தூர்க்கின்ற மலர் மாரி தொடரப் போய் - கொட்டுகின்ற பூ மழை (தன்னைப் பின்) தொடர்ந்து வரச் சென்று; பாற்கடலில் தூநீர் ஆடி - திருப்பாற்கடலில் புனித நீர் ஆடி; தேர்க்குன்ற இராவணன் தன் - (திரும்பி) குன்றனைய தேருடைய இராவணனின்; செழுங்குருதிப் பெரும் பரவைத் திரைமேல் சென்று - செழித்த இரத்தம் என்னும் பெருங்கடலின் அலை மேலே சென்று; கார்க்குன்றம் அனையான்தன் கடுங்கணை - கரிய மலை போன்ற இராமபிரானின் கடிய சரம்; புட்டிலின் நடுவண் - அம்பறாத் தூணியினிடையே; கரந்தது - (இராகவனின்) அந்தப் புனிதக்கணை ஒளிந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the shouting gods, the Brahmins and the sages gave their blessings
  2. and a shower of heaped-up flowers followed it, it went and bathed in the pure waters of the Sea of Milk,
  3. then travelled over the waves of the great ocean of rich blood of Irāvaṇaṉ, whose chariot was a mountain,
  4. and hid itself again in the quiver of fierce arrows of him who is like a dark mountain.

What the poem says

After killing Irāvaṇaṉ the holy arrow does not simply drop. Followed by a rain of flowers and the blessings of gods, Brahmins and sages, it goes to purify itself in the Sea of Milk, Viṣṇu's own ocean, then skims back over the sea of Irāvaṇaṉ's blood and slips quietly back into the quiver of Irāmaṉ, dark as a rain-cloud mountain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ārkkiṉṟa vāṉavarum, antaṇarum, muṉivarkaḷum, āci kūṟit
tūrkkiṉṟa malar māri toṭarap pōy, pāṟkaṭalil tūy nīr āṭi,
tērk kuṉṟa irāvaṇaṉtaṉ ceḻuṅ kurutip perum paravait tiraimēl ceṉṟu,
kārk kuṉṟam aṉaiyāṉtaṉ kaṭuṅ kaṇaip puṭṭiliṉ naṭuvaṇ karantatu amma