கம்பராமாயணம் 9959 · யுத்த 36.198
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சிகரம் போல்வான் - (அரக்கர் இனம் என்னும் மலைக்குச்) சிகரம் போன்றிருந்த இராவணன்; கார் நின்ற மழை நின்றும் உரும் உதிர்வ என - கருமை நிறைந்த மழை மேகத்திலிருந்து இடிகள் உதிர்ந்து வீழ்வதே போல்; திணி தோட்காட்டின் நின்றும் - திண்ணிய இருபது தோள்களிலிருந்தும்; தார் நின்ற மலை நின்றும் - மாலையணிந்த மலை போன்ற மார்பிலிருந்தும்; பணிக்குலமும் மணிக்குலமும் தகர்ந்து சிந்த - ஆபரணத் தொகுதிகளும் மாணிக்கத் தொகுதிகளும் உடைந்து சிதறவும்; போர் நின்ற விழி நின்றும் - போர்க் குணத்தோடு நின்ற விழிகளிலிருந்து; பொறிநின்று - தீப்பொறி தோன்றி; புகையோடும் குருதி பொங்க - புகையுடனே உதிரம் பொங்கவும்; தேர் நின்று - தேரிலிருந்து; நெடு நிலத்து - அகன்ற பூமியின் மேல்; சிரம் முகம் கீழ்பட விழுந்தான் - தலையுடன் கூடிய முகம் கீழ்ப்பட (குப்புற) விழுந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like thunderbolts falling from a dark rain-cloud, from the dense forest of his shoulders
- and from the garlanded mountain of his chest, heaps of ornaments and heaps of gems were shattered and scattered;
- from his battle-fierce eyes sparks flew out, and blood welled up with smoke;
- from his chariot onto the wide earth he fell, heads and faces down, he who was like a mountain peak.
What the poem says
Irāvaṇaṉ, the peak of the rākṣasa race, falls from his chariot face down onto the ground. Ornaments and jewels shatter and scatter from his twenty arms and his garlanded chest like thunderbolts dropping from a storm cloud, and sparks, smoke and blood pour from his eyes that were still fierce for battle.