கம்பராமாயணம் 9961 · யுத்த 36.200
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொலந்தேரை இனிப் பூதலத்தது ஆக்குவாயாக - பொன் மயமான தேரை இனி மண் மீது இறக்குவாயாக; என்ற போதின் - என்று (இராமபிரான் மாதலிக்கு) ஆணையிட்ட போதில்; மாதலிப் பேரவன் - மாதலி என்னும் பேருடைய அத்தேர்ச் சாரதி; கடவ - செலுத்த; மண் தலத்தின் அப்பொழுதே வருதலோடும் - மண்ணின் மீது (அத்தேர் படிந்து) அக்கணத்திலேயே வருகின்ற போது; காதலித்த உருவாகி - (கண்டாற்) விரும்பும் எல்லா இலக்கணங்களும் பொருந்தப் பெற்ற உருவம் உடையவனாக; அறம் வளர்க்கும் கண்ணாளன் - தருமத்தை (உலகில்) வளர்க்கப் பிறந்த கருணை யாளனாகிய இராமபிரான்; மீது அலைத்த பெருந்தாரை - மேலே அலையெறிந்து கொண்டுள்ள பெரிய உதிரப் பெருக்கு, விசும்பு அளப்பக் கிடந்தான் தன் மேனி முற்றும் - விண்ணளவும் தெறிக்கக் கிடந்தவனாகிய இராவணனது உடம்பு முழுதும்; தெரியக் கண்டான் - விளங்க நன்றாகப் பார்த்தான்.
இராமன் பெயரே ரமிக்கச் செய்பவன் எனும் பொருளது ஆதலின் "காதலித்த உரு" என்றார். ஒவ்வோர் உறுப்பே, ஒவ்வொருவர்க்கு விருப்பம் தருமாறு அமைந்திருப்பது இயல்பாயிருக்க, இராமன் அங்கங்கள் அனைத்தாலும் கவரும் அழகன் ஆதலின் "காதலித்த உரு" என்றார். அழகு உடையான் (கம்ப. 1920) என்பதும் காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Now bring the golden chariot down to the earth,' he said, and when
- he who bore the name Mātali drove it and it came down to the ground at once,
- he of the beloved form, the compassionate one who makes dharma flourish,
- looked clearly over the whole body of him who lay there, the great streams of blood surging over it as high as the sky.
What the poem says
Irāmaṉ orders Mātali to bring the celestial chariot down to the ground. Once it lands, Irāmaṉ, the compassionate upholder of dharma, gazes at the whole of Irāvaṇaṉ's body lying in a flood of blood that seems to reach the sky.
He is described as having a 'beloved form': the commentary notes that the name Rāma itself means 'he who delights', and that while most people have one attractive feature, every part of him is lovely.