கம்பராமாயணம் 9962 · யுத்த 36.201
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நீ தேரினை கொண்டு விசும்பில் செல்க - நீ தேரைக் கொண்டு வானுலகிற்குச் செல்வாயாக; என்ன - என்று; மாதலியைச் செலுத்தி - மாதலிக்கு விடை தந்து; பின்பு பாரிடம் மீதினின் அணுகி - பிறகு மண்ணின் மேல் வந்து; திருவாளன் - திருமகள் நாதனாகிய இராமபிரான்; தம்பியொடும் படைத்தலைவர் பலரும் சுற்ற - தம்பியாகிய இலக்குவனும் படைத் தலைவர்கள் பலரும் தன்னைச் சுற்றி வர; போரிடை மீண்டு - (இதுவரை) போர்க்களத்திலிருந்து பின்வாங்கி; ஒருவர்க்கும் புறங்கொடா - யார்க்கும் புறமுதுகு காட்டியறியாத; போர் வீரன் - போரிற் சிறந்த வீரனாகிய இராவணன்; பொருது வீழ்ந்த சீரினையே - போரிட்டு வீழ்ந்து கிடக்கும் சிறப்பினை; மனம் உவப்ப - தன் மனம் உவகையுற; உரு முற்றும் தெரியக் கண்டான் - அவனுடைய உடல் முழுவதனையும் நன்றாகப் பார்த்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Sending Mātali off with 'Take the chariot and go to the sky,' and then
- coming down upon the earth, with his brother and many army chiefs around him,
- the glorious Lord, with gladness in his heart at the noble way that warrior,
- who never turned back in battle or showed his back to anyone, had fought and fallen, looked clearly over his whole form.
What the poem says
Irāmaṉ dismisses Mātali with the chariot back to heaven and steps down onto the ground, surrounded by Ilakkuvaṉ and the army commanders. He looks over Irāvaṇaṉ's whole body and is glad in his heart that this warrior, who never once turned his back on an enemy, died fighting nobly.