கம்பராமாயணம் 9964 · யுத்த 36.203

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தோடு உழுத நறும் தொடையல் தொகை உழுத கிளைவண்டின் சுழியல் தொங்கல்
பாடு உழுத படர்வெரிநின் பணி உழுத அணிநிகர்ப்ப, பணைக்கை யானைக்
கோடு உழுத நெடுந்தழும்பின் குவைதழுவி, எழுமேகக் குழுவின் கோவைக்
காடு உழுத கொழும்பிறையின் கறைகழன்று கிடந்தனபோல் கிடக்கக் கண்டான்

பொருள் · Meaning in Tamil

தோடுழுத நறுந்தொடையல் - இதழ்களால் ஆன மணமாலைகளின்; தொகை உழுத கிளை வண்டின் - தொகுதிகளை உழுது கொண்டிருக்கின்ற வண்டுகளையுடைய; சுழியத் தொங்கல் - தலை மாலைகளோடு கூடிய மாலைகளின்; பாடு உழுத படர் வெரிநின் - பக்கங்களில் படர்ந்து கிடக்கிற (இராவணன்) முதுகில்; பணி உழுத அணி நிகர்ப்ப - அழகிய வேலைப்பாடு நிறைந்த அணிகலத்தைப் போன்று; பணைக்கை யானைக்கோடு உழுத நெடுந் தழும்பின் குவை - பருத்த கையையுடைய திசை யானைகளின் கொம்புகள் உழுததனால் தோன்றிய நீண்ட தழும்புகளின் கூட்டத்தை; தழுவி - பொருந்தி; எழு மேகக் குழுவின் கோவைக் காடுஉழுத - எழுகின்ற மேகக் கூட்டத்தின் வரிசையாகிய காட்டில் உலாவுகின்ற; கொழும் பிறையில் - செழித்த பிறை நிலாவின்; கறை கழன்று - களங்கம் நீங்கி; கிடந்தன போல் கிடக்கக் கண்டான் - கிடந்தன போலக் கிடக்கக் கண்டான் (இராமபிரான்)

"இராவணன் தார் கிடந்த முதுகில் அணி செய்யும் துணி போல, எட்டுத்திக்கு யானைகளும் பாய்ந்ததால் எழுந்த தழும்பின் குவைகள், வட்டம் வட்டமாக உதிரத்துடன் சிவந்திருப்பது ஒரு மேகத்தில் களங்கமற்ற முழு மதி, கோவைப் பழத்திலே முழுகிச் சிவப்பேறியிருப்பதை ஒத்திருந்தது" என்று உரை கூறினுமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On his broad back, beside the garlands with crowns of flowers, where swarms of bees ploughed through the heaps of fragrant petal wreaths,
  2. looking like finely worked ornaments, he saw the heaps of long scars
  3. ploughed by the tusks of the thick-trunked elephants, lying there
  4. like rich crescent moons, rid of their stains, that had ploughed through the forest of the rows of rising clouds.

What the poem says

Irāmaṉ notices the scars on Irāvaṇaṉ's back, gouged long ago by the tusks of the elephants of the directions. Among the garlands buzzing with bees, they look like decorations, or like crescent moons, cleansed of their dark marks, drifting through a forest of clouds.

The commentary gives an alternative reading, in which the red, blood-rimmed scars are like a stainless full moon in a cloud that has been dipped in red kōvai fruit.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tōṭu uḻuta naṟun toṭaiyal tokai uḻuta kiḷai vaṇṭiṉ cuḻiyat toṅkal
pāṭu uḻuta paṭar veriniṉ paṇi uḻuta aṇi nikarppa, paṇaik kai yāṉaik
kōṭu uḻuta neṭun taḻumpiṉ kuvai taḻuvi, eḻu mēkak kuḻuviṉ kōvaik
kāṭu uḻuta koḻum piṟaiyiṉ kaṟai kaḻaṉṟu kiṭantaṉapōl kiṭakkak kaṇṭāṉ