கம்பராமாயணம் 9965 · யுத்த 36.204

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தளிர் இயல் பொருட்டின் வந்த சீற்றமும் தருக்கினோன் தன்
கிளர் இயல் உருவினோடும் குழிப்புறக் கிளர்ந்து தோன்றும்
வளரியல் வடுவின் செம்மைத் தன்மையும் மருவ நின்ற
முளரி அம்கண்ணன் மூரல் முறுவலன், மொழிவது ஆனான்.

பொருள் · Meaning in Tamil

முளரி அம் கண்ணன் - இராவணன் உடலருகே சென்று நின்று தாமரை போன்ற அழகிய கண்களையுடைய இராமபிரான்; தளிர் இயல் பொருட்டின் வந்த சீற்றமும் - தளிர் போன்ற மென்மைத் தன்மை வாய்ந்த சீதையின் காரணத்தால் (இராவணன் மேல் எழுந்து) சினமும்; தருக்கினோன் தன் - செருக்கு மிக்க இராவணனுடைய; கிளர் இயல் உருவினோடும் - கிளர்ச்சி தரும் அவன் வடிவத்தில்; கிழிப்புறக் கிளர்ந்து தோன்றும் - முதுகுப் பக்கம் கிழிபட்டுத் தெளிவாகத் தோன்றும்; வளர் இயல் வடுவின் - நீண்ட தழும்பின்; செம்மைத் தன்மையும் - சிவந்த தன்மையும், மருவ நின்ற - கூடிக் கலக்க (எழுந்த); மூரல் முறுவலன் - (இகழ்ச்சியால் எழுந்த) புன்சிரிப்புக் கொண்டவனாய்; மொழிவதானான் - கூறத் தொடங்கினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The anger that had arisen for the sake of her whose nature is soft as young leaves,
  2. and the redness of the long scars that showed up, torn into
  3. the splendid form of that proud one — as these mingled,
  4. the lotus-eyed one, a faint smile on his lips, began to speak.

What the poem says

Standing over the body, Irāmaṉ feels his anger, born of what Irāvaṇaṉ did to the tender Cītai, mix with what he sees: red scars on the proud king's back. A faint, scornful smile comes to his lips, and he begins to speak, assuming the scars on the back are wounds of a warrior who had once fled.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taḷir iyal poruṭṭiṉ vanta cīṟṟamum tarukkiṉōṉtaṉ
kiḷar iyal uruviṉōṭum kiḻippuṟak kiḷarntu tōṉṟum
vaḷar iyal vaṭuviṉ cemmait taṉmaiyum maruva niṉṟa
muḷari am kaṇṇaṉ mūral muṟuvalaṉ, moḻivatāṉāṉ.