கம்பராமாயணம் 9967 · யுத்த 36.206

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 “
பாட வேறுபாடு · Project Madurai reads
1“‘கார்த்த வீரியன் என்பானால் கட்டுண்டான் “ என்னச் சொல்லும்
வார்த்தை உண்டு; அதனைக் கேட்டு, நாணுறு மனத்தினேற்குப்
போர்த்தலைப் புறகிட்டு ஏற்ற புண்ணுடைத் தழும்பு போலாம்
நேர்த்ததும் காணல் உற்றது; ஈசனார் இருக்கை நிற்க!

பொருள் · Meaning in Tamil

ஈசனார் இருக்கை நிற்க - சிவபிரான் மலையை எடுத்து (இராவணன் பரிபவப்பட்டது ஒருபக்கம்) நிற்பினும், கார்த்தவீரியன் என்பானால் கட்டுண்டான் - கார்த்த வீரியன் என்னும் மானுட மன்னனால் இவன் பிணிக்கப்பட்டான்; என்னக் கற்கும் வார்த்தை உண்டு - என்று கூறப்படும் வார்த்தை உலகில் (இவனைப் பற்றி) உண்டு; அதனைக் கேட்டு நாணுறும் மனத்தினேற்கு - (அந்த அவமானச் சொல்லைக் கேட்டே வெட்கமுற்ற உள்ளமுடைய எனக்கு; போர்த்தலை - போரிலே; புறகிட்டு ஏற்ற புண்ணுடைத் தழும்பும் - புறமுதுகிட்டு அதனால் வந்த புண்களால் ஏற்பட்ட தழும்புகளும்; நேர்த்ததும் காணல் உற்ற - நேரிடையாகக் காணல் உற்றன.

"நான் வீரர்களுள் இராமனாக இருக்கிறேன்" என்றான் கீதையில் கண்ணன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'There is a story people learn: "He was bound captive by one Kārttavīriyaṉ."
  2. Hearing it, my heart was already ashamed;
  3. and now these scars of wounds he took when he turned his back in battle —
  4. those too I have come to see before me; let alone the matter of the Lord's mountain seat!'

What the poem says

Irāmaṉ goes on. Leaving aside the humiliation Irāvaṇaṉ suffered when he tried to lift Kailāsa, Śiva's mountain home, there is the well-known story that the human king Kārttavīryārjuna once took him prisoner. Irāmaṉ was already ashamed to hear that of his opponent, and now he sees with his own eyes what look like the scars of a warrior who turned his back.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1“‘kārttavīriyaṉ eṉpāṉāl kaṭṭuṇṭāṉ “ eṉṉak kaṟkum
vārttai uṇṭu; ataṉaik kēṭṭu, nāṇuṟu maṉattiṉēṟkup
pōrttalaip puṟakiṭṭu ēṟṟa puṇṇuṭait taḻumpum pōlām
nērttatum kāṇaluṟṟa; īcaṉār irukkai niṟka!