கம்பராமாயணம் 9968 · யுத்த 36.207
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பூண் தொழில் உடைய மார்பா! - அணிகளைத் தரிக்கும் மார்பினையுடைய வீடணனே; ஊண் தொழில் உகந்து - உண்ணும் செயலையே விரும்பி; தெவ்வர் முறுவல் என்புகழை உண்ண - பகைவர்கள் (இகழ்ச்சிப்) புன்னகை என் புகழைத் தின்று தீர்க்க; போர்ப்புறம் கொடுத்தோர்ப் போன்ற - போரில் புற முதுகிட்டவர்களைப் போன்ற; ஆண் தொழிலோரின் - ஆண்மைச் செயலையுடைய இவ்விராவணனால்; பெற்ற வெற்றியும் - அடைந்த வெற்றியும்; அவத்தம் - வீணானதே; மாண்டு ஒழிந்து - இராவணன் இறந்து ஒழிந்ததனால்; உலகில் நிற்கும் வயங்கும் இசை - (எனக்கு) உலகில் அழியாமல் நிற்கவல்ல விளங்குகின்ற புகழும்; முயங்க மாட்டாது - (இனி) என்பால் அடைய மாட்டாது.
உலகில் நிற்கும் வயங்கு இசை - உலகில் நிலைத்து நிற்க வல்லது புகழ் ஒன்றே "ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால், பொன்றாது நிற்பது ஒன்று இல்" (குறள் 233)
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The bright fame that remains in the world after one has died and gone will not be mine;
- my enemies' smiles, which delight in the work of eating, will devour my fame;
- O you whose chest bears ornaments! The victory won over one
- whose manly deeds were like those of men who turn their backs in battle is worthless,' he said.
What the poem says
Irāmaṉ tells Vīṭaṇaṉ that this victory is empty. Lasting fame is the only thing that survives a person's death, as the Tirukkuṟaḷ says, but a victory over a warrior who once fled the field will win him none; instead his enemies' mocking smiles will 'eat up' his reputation.