கம்பராமாயணம் 9969 · யுத்த 36.208

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அவ்வுரை உரைப்பக் கேட்ட வீடணன், அருவிக் கண்ணன்,
வெவ்வுயிர்ப்போடு நீண்ட விம்மலன், வெதும்பும் நெஞ்சன்,
‘செவ்வியின் தொடர்ந்த அல்ல செப்பலை, செல்வ! ‘என்னா,
எவ்வுயிர்ப் பொறையும் நல்கி இரங்கிநின்று, இனைய சொன்னான்.

பொருள் · Meaning in Tamil

அவ்வுரை உரைப்பக் கேட்ட வீடணன் - (இராமபிரானின்) அந்த உரைகளைக் கேட்ட வீடணன்; அருவிக் கண்ணன் - அருவி நீர் போன்ற கண்ணீரையுடையவனாய், வெவ்வுயிர்ப் போடு நீண்ட விம்மலன் - பெருமூச்சோடும் கூடிய விம்மலையும் உடையவனாய்; வெதும்பும் நெஞ்சன் - வெதும்புகின்ற நெஞ்சோடும் கூடியவனாய்; செல்வ - செல்வனாகிய இராமபிரானே; செவ்வியில் தொடர்ந்த அல்ல - செம்மையில் கூடாத வார்த்தைகளை; செப்பலை - செப்ப வேண்டா; என்னா - என்று கூறி; எவ்வுயிர்ப் பொறையும் நீங்க - எந்த உயிரும் தரிக்க இயலாவாறு; இரங்கி நின்று இனைய சொன்னான் - இரக்கத்தோடு தோன்ற நின்று இத்தகைய மொழிகளை மொழியலானான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Vīṭaṇaṉ, hearing those words spoken, his eyes streaming like waterfalls,
  2. with hot breath and long sobs, his heart scalding,
  3. said, 'O glorious one, do not say things that do not fit the truth,'
  4. and, standing there grieving so that no living being could bear it, he spoke these words.

What the poem says

Vīṭaṇaṉ, Irāvaṇaṉ's brother, has heard Irāmaṉ's remark about the scars. Weeping in torrents, sobbing and burning inside, he begs Irāmaṉ not to say things that are not true, and in a grief so deep that no one could bear to watch it, he explains in the verses that follow.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1avvurai uraippak kēṭṭa vīṭaṇaṉ, aruvik kaṇṇaṉ,
vev uyirppōṭu nīṇṭa vimmalaṉ, vetumpum neñcaṉ,
‘cevviyiṉ toṭarnta alla ceppalai, celva! ‘eṉṉā,
ev uyirp poṟaiyum nīṅka iraṅki niṉṟu, iṉaiya coṉṉāṉ.