கம்பராமாயணம் 9971 · யுத்த 36.210
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நாடு உளதனையும் ஓடி - உலகமுள்ள எல்லை வரையிலும் விரைந்து; நண்ணலார்க் காண்கிலாமல் - (எல்லோரையும் வென்று முடித்து விட்டபடியால்) பகைவரைக் காண இயலாமையால்; பீடு உள குன்றம் போலும் - (இவைகளையாகிலும் வெல்வேன் என்று) பெருமிதம் வாய்ந்த குன்றுகள் போன்றிருந்த; பெருந்திசை எல்லை யானைக் கோடு - எட்டுப் பெரிய திக்குகளில் காவலாக உள்ள யானைகளின் கொம்புகளை; உளதனையும் புக்கு - அவற்றின் நீளம் உள்ளளவும் மார்பில் அழுத்தி; கொடும்புறத்து அழுந்து புண்ணின் - கொடிய முதுகின் வெளிப்புறம் அழுந்தியதனால் ஆகிய புண்களின்; பாடு உளது அன்றி - தழும்புகள் உள்ளனவேயல்லாமல்; தெவ்வர் படைக்கலம் பட்டு - பகைவர் ஆயுதங்கள் இவன் உடம்பில் பட்டு; என்ன செய்யும்? - என்ன செய்யவல்லவையாம்?
புண்ணின் பாடு - தழும்பு
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'He ran to the very ends of the earth and found no foes left to face;
- so he took into himself, their whole length, the tusks of the elephants of the vast directions,
- great as proud mountains, and these are only the marks of the wounds they pressed into the far side of his back.
- What could the weapons of enemies ever do to him?'
What the poem says
Vīṭaṇaṉ explains the scars. Irāvaṇaṉ had conquered every enemy on earth, and with no one left to fight he took on the mountain-sized elephants that guard the eight directions. Their tusks drove right through his chest and came out at his back; the marks Irāmaṉ saw are those exit wounds, not signs of flight. No enemy weapon could ever have wounded him.