கம்பராமாயணம் 9974 · யுத்த 36.213
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வென்றியாய்! - வெற்றி வீரனே; வேலை சூழ் ஞாலம் - கடல் சூழ் உலகை; ஆண்டு ஓர் பன்றியாய் - அக்காலத்தில் ஒரு வராக வடிவாகி; எயிற்றுக் கொண்ட பரம்பரன் - கொம்பில் ஏந்தி வந்த திருமால்; முதல் பல்லோர் - முதலான பலரும்; யாம் இடுக்கண் தீர்வது என்று என்கின்றார் - நாம் (இராவணனுடைய) துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவது என்று என்று ஏங்கியிருக்கின்றனர்; உன்னால் இன்று இவன் பொன்றினான் என்றபோதும் - உன்னால் இந்த இராவணன் இன்று அழிந்தான் என்று சொன்னாலும்; பொய் கொல் - இச்செய்தி பொய்யோ; என்பர் - என்று ஐயங் கொள்வார்; புலப்படார் - (இறந்தான் என நம்பி) வெளித் தோன்ற மாட்டார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'O victor! Is there anything more to say? The many, beginning with the Supreme One
- who once became a boar and lifted the sea-girt earth on his tusk,
- keep asking, "When will our troubles end?" Even when told, "Today he
- perished at your hands," they will not come out; "Is it a lie?" they will say.'
What the poem says
Vīṭaṇaṉ closes his tribute. So great was Irāvaṇaṉ's power that the gods, beginning with Viṣṇu himself, who once took the form of a boar and raised the drowned earth on his tusk, have long lived asking when their misery would end. Even when they hear that Irāmaṉ has killed him today, they will not believe it, and will stay in hiding, suspecting the news is false.