கம்பராமாயணம் 9979 · யுத்த 36.218

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘உண்ணாதே உயிர் உண்ணாது ஒருநஞ்சு; சனகி எனும் பெருநஞ்சு உன்னைக்
கண்ணாலே நோக்கவே போக்கியதே உயிர்; நீயும் களம் பட்டாயே!
எண்ணாதேன் எண்ணியசொல் இன்று இனித்தான் எண்ணுதியோ? எண் இல் ஆற்றல்
அண்ணாவோ! அண்ணாவோ! அசுரர்கள்தம் பிரளயமே! அமரர் கூற்றே.

பொருள் · Meaning in Tamil

எண் இல் ஆற்றல் அண்ணாவோ! அண்ணாவோ! - அளவற்ற ஆற்றல்களின் உறைவிடமாயிருந்த என் அண்ணனே! என் அண்ணனே! அசுரர்கள் தம் பிரளயமே - அசுரர்கட்கு எல்லாம் ஊழிக்காலமாய் உருவெடுத்தவனே!; அமரர் கூற்றே! - தேவர்கட்கு எல்லாம் எமனாய் இருந்தவனே!; ஒரு நஞ்சும் - எந்த விடமும்; உண்ணாதே உயிர் உண்ணாது - உண்ணாமல் ஓர் உயிரை உண்ணாது; சனக எனும் பெரு நஞ்சு - (இதற்கு மாறாக) சானகி என்னும் கொடிய விடம்; கண்ணாலே நோக்கவே - (நீ) கண்ணாலே கண்ட மாத்திரத்தில்; உன்னை உயிர் போக்கியதே - உன் உயிரைப் போக்கியதே; நீயும் களப்பட்டாயே - (ஒப்புயர்வற்ற பெருவீரனாகிய) நீயும் (சாமானியன் போன்ற) படுகளம் பட்டு வீழ்ந்து கிடந்தனையே; எண்ணாதேன் எண்ணிய சொல் - எண்ணத் தெரியாதவன் என்று (உன்னால் கருதப்பட்ட) நான் எண்ணி உரைத்த சொற்களை; இன்று இனித்தான் எண்ணுதியோ? - இந்த இறுதிக் காலத்தில் இப்போது தான் எண்ணுகின்றாயா?

"திட்டியின் விட மன்ன கற்பின் செல்வி" (கம்ப. 7351) என்பது காண்க. "அசுரர்களின்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'No poison takes a life unless it is swallowed; but that great poison called Caṉaki
  2. took your life the moment you looked at her with your eyes. And you too have fallen on the battlefield!
  3. The words I weighed, I whom you thought could not think, will you weigh them now, today?
  4. O brother of boundless strength! O brother! Doomsday of the asuras! Death to the immortals!'

What the poem says

Vīṭaṇaṉ's lament begins. Ordinary poison kills only if it is swallowed, but Cītai, daughter of Caṉakaṉ, was a poison that killed Irāvaṇaṉ simply because he looked at her. Now this hero, who was like the end of the world to the asuras and like Death to the gods, lies fallen like any common soldier.

Vīṭaṇaṉ bitterly asks whether his brother, who dismissed him as a fool, will at last consider the advice he gave.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘uṇṇātē uyir uṇṇātu oru nañcu; caṉaka eṉum peru nañcu uṉṉaik
kaṇṇālē nōkkavē pōkkiyatē uyir; nīyum kaḷap paṭṭāyē!
eṇṇātēṉ eṇṇiya col iṉṟu iṉit tāṉ eṇṇutiyō? eṇ il āṟṟal
aṇṇāvō! aṇṇāvō! acurarkaḷtam piraḷayamē! amarar kūṟṟē.