கம்பராமாயணம் 9980 · யுத்த 36.219

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘‘
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘ஓராசை ஒருவன்மேல் உயிராசைக் குலமகள்மேல் உடைய காதல்
தீர்; ஆசை பழி ‘‘ என்றேன்; எனைமுனிந்த முனிவு ஆறித் தேறினாயோ?
போர் ஆசைப்பட்டு எழுந்த குலம் முற்றும் பொன்றவும்தான் பொங்கி நின்ற
பேராசை பேர்ந்ததோ? பேர்ந்து ஆசைக் கரி இரியப் புருவம் பேர்த்தோய்!

பொருள் · Meaning in Tamil

ஆசைக்கரி பெயர்ந்து இரியப் புருவம் பேர்த்தாய் - திசை யானைகள் நிலை பெயருமாறு புருவம் பெயர்க்கும் திறல் வாய்ந்தவனே; ஓராதே - உணராமல்; ஒருவன் தன் உயிர் ஆசைக் குலமகள் மேல் - வேறு ஒருவன் தன் உயிர் போன்று நேசித்து வந்த ஒரு குல மகளின் மேல்; உற்ற காதல் - கொண்ட ஆசை; தீராத வசை என்றேன் - (என்றும்) தீராப் பழியைத் தரும் என்று கூறினேன்; எனை முனிந்த முனிவு ஆறித் தேறினாயோ? - (அப்போது) நீ என் மேற் கொண்ட கோபம் (தவறு என்று) (இப்போதாவது) தணிந்து தெளிவடைந்தாயா?; போர் ஆசைப்பட்டு எழுந்த - போரிலே ஆசை கொண்டு எழுந்த; குலம் முற்றும் பொன்றவும் - குலம் முழுவதும் அழிந்து படவும்; பொங்கி நின்ற பேர் ஆசை பெயர்ந்ததோ? - மேன்மேல் உயர்ந்து வந்த உன் பேராசை (இப்போதாவது) ஒழிந்ததா?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'I told you, "Give up the passion you hold for a noble woman whom another man loves as his own life;
  2. that desire brings disgrace." Has the anger you felt against me cooled now, have you understood?
  3. Now that your whole clan, which rose up eager for war, has perished,
  4. has that great desire that swelled in you gone at last? — you who could make the elephants of the directions flee by moving your brow!'

What the poem says

Vīṭaṇaṉ reminds his dead brother that he warned him: desire for a noble woman who is the very life of another man can bring nothing but disgrace. Has Irāvaṇaṉ's anger at that advice finally cooled? Now that his whole war-hungry clan lies dead, has his towering passion finally left him, he who could scatter the elephants of the directions with a frown?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘ōr ācai oruvaṉmēl uyir ācaik kulamakaḷmēl uṭaiya kātal
tīr; ācaip paḻi ‘‘ eṉṟēṉ; eṉai muṉinta muṉivu āṟit tēṟiṉāyō?
pōr ācaippaṭṭu eḻuntakulam muṟṟum poṉṟavumtāṉ poṅki niṉṟa
pēr ācaip peyarntatō? peyarntu ācaik kari iriyap puruvam pērttāy!