கம்பராமாயணம் 9982 · யுத்த 36.221

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘மன்றல் மாமலரானும், வடிமழுவாள் படையானும், வரங்கள் ஈந்த
ஒன்று அலாதன உடைய முடியோடும் பொடி ஆகி உதிர்ந்து போன;
அன்றுதான் உணர்ந்திலையே ஆனாலும் வான்நாட்டை அணுகா நின்ற
இன்றுதான் உணர்ந்தனையே, இராமன் தான் யாவருக்கும் இறைவன் ஆதல்.

பொருள் · Meaning in Tamil

மன்றல் மா மலரோனும் - மணமுள்ள தாமரை மேல் வாழ்பவனாகிய பிரமதேவனும்; வடி மழுவாள் படையானும் - கூரிய மழுவாளைப் படையாகக் கொண்ட சிவபிரானும், ஈந்த - கொடுத்தருளிய; வரங்கள் - வரங்கள்; ஒன்று அலாதன உடைய - பத்தாகவுள்ள; முடியோடு - உன் தலைகளோடு சேர்ந்து; பொடியாகி உதிர்ந்து போன - பொடிப் பொடியாக உதிர்ந்து போயின; அன்றுதான் உணர்ந்திலையே ஆனாலும் - (நீ சீதையை எடுத்து வந்து) அன்று இராமனின் ஆற்றலை உணராது போனாலும்; அவன் நாட்டை அணுகா நின்ற இன்றுதான் - அந்த பரமபதத்தை அடையா நின்ற இன்றைக்கு ஆகிலும்; இராமன் தான் யாவர்க்கும் இறைவன் ஆதல் - இராமனே அனைவர்க்கும் இறைவன் ஆவான் என்பதனை; உணர்ந்தனையே - உணர்ந்தாயோ?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The boons given by him of the great fragrant flower and by him who bears the sharp axe
  2. have crumbled to dust and fallen away together with your heads, which were more than one.
  3. Even if you did not understand it that day, today, as you draw near to his world,
  4. have you understood at last that Irāmaṉ is Lord of all?'

What the poem says

All the boons Brahmā (seated on the lotus) and Śiva (bearer of the axe) gave Irāvaṇaṉ have crumbled to dust with his ten heads. Vīṭaṇaṉ asks whether, though he did not see it when he carried off Cītai, Irāvaṇaṉ has finally realised now, as he goes to Irāmaṉ's own heaven, that Irāmaṉ is the Lord of all beings.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘maṉṟal mā malarāṉum, vaṭi maḻu vāḷ paṭaiyāṉum, varaṅkaḷ īnta
oṉṟu alātaṉa uṭaiya muṭiyōṭum poṭi āki utirntu pōṉa;
aṉṟutāṉ uṇarntilaiyē āṉālum avaṉ nāṭṭai aṇukāniṉṟa
iṉṟutāṉ uṇarntaṉaiyē, irāmaṉ tāṉ yāvarukkum iṟaivaṉ ātal.