கம்பராமாயணம் 9983 · யுத்த 36.222
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வீரநாடு உற்றாயோ? - வீரர்கள் அடையும் துறக்க நாட்டை அடைந்தாயோ?; விரிஞ்சன் ஆம் யாவருக்கும் மேலாம் முன்பன் பேரன் நாடு உற்றாயோ? - விரிஞ்சன் எனும் பெயரினனாய (உயிர்களில்) எவர்க்கும் மேன்மையும் முதன்மையும் உடையவனான நான்முகன் ஆகிய உன் பாட்டனின் நாட்டினை அடைந்தாயோ?; பிறைசூடும் பிஞ்ஞகன் தன் புரம் பெற்றாயோ - பிறை நிலவைச் சிரத்தில் சூடும் சிவபெருமானின் கயிலாய புரத்தையடைந்தாயோ?; அணா - அண்ணா!; உன் உயிரை அஞ்சாதே கொண்டு அகன்றார் ஆர்? - உனது உயிரை அஞ்சாமற் கொண்டு சென்றவர் தான் யார்?; அது எலாம் நிற்க - அது எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்; மாரனார் தனியாட்டம் தவிர்ந்தாரோ? - மன்மதனார் (உன்பால் ஆடிய) வலிய ஆட்டத்தை (இப்போதாவது) நிறுத்திக்கொண்டாரோ; மதியம் என்பான் குளிர்ந்தானோ? - (காம தாபத்தால் உன்னை எரித்துக் கொண்டிருந்த) சந்திரன் (இப்போதாவது) குளிர்ச்சி தருபவன் ஆனானோ?
வீரநாடு - வீர சொர்க்கம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Have you reached the heroes' heaven? Have you reached the world
- of Viriñcaṉ, the ancient one above all, your grandfather's grandfather? Have you won the city of the wild-haired god who wears the crescent?
- Who was it, brother, who dared to carry off your life without fear? But let all that be:
- has the god of love stopped his cruel dance? Has the one they call the moon grown cool at last?'
What the poem says
Vīṭaṇaṉ wonders where his brother has gone: to the paradise of fallen heroes, to the world of Brahmā (Viriñcaṉ), his ancestor, or to Śiva's city. Who could have been bold enough to take his life?
Then he turns to Irāvaṇaṉ's lovesickness. In Tamil poetry the moon's light burns a lover who is pining. Vīṭaṇaṉ asks whether Kāma has at last stopped tormenting him and whether the moon has finally turned cool.