கம்பராமாயணம் 9984 · யுத்த 36.223

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 “
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘கொல்லாத மைத்துனனைக் கொன்றாய் “ என்று அதுகுறித்துக் கொடுமை சூழ்ந்து,
பல்லாலே இதழ் அதுக்கும் கொடும்பாவி நெடும்பாரப் பகை தீர்ந்தாளோ?
நல்லாரும் தீயாரும் நரகத்தார் துறக்கத்தார், நம்பி! நம்மோடு
எல்லாரும் பகைஞரே; யார்முகத்தே விழிக்கின்றாய்? எளியை ஆனாய்!

பொருள் · Meaning in Tamil

கொல்லாத மைத்துனனை - கொல்லத் தகாத மைத்துனனை; கொன்றாய் என்று - நீ கொன்று விட்டாய் என்று; அது குறித்துக் கொடுமை சூழ்ந்து - அக்கொடுமையை மனத்துட் கொண்டு புரியச் சூழ்ச்சி செய்து; பல்லாலே இதழ் அதுக்கும் கொடும்பாவி - (சமயம் பார்த்த வண்ணம்) பற்களால் இதழைக் கடித்துக் கொண்டிருந்த கொடிய பாவியான சூர்ப்பணகை; நெடும் பாரப் பழி தீர்ந்தாளே! - (தன் நெஞ்சை யழுத்திக் கொண்டிருந்த) பெரும் பாரமாம் பழியை (இப்போது) தீர்த்துக் கொண்டாளோ?; நம்பி - நம்பியே; நல்லாரும் தீயாரும் - நல்லோர்களும் தீயோர்களும்; நரகத்தார் துறக்கத்தார் - நரகத்திலா (அன்றி) சொர்க்கத்திலா இருப்பார்கள்; நம்மோடு எல்லோரும் பகைஞரே! - நம்மோடு அனைவரும் பகைமை பாராட்டுபவர்களே!; எளியை ஆனாய் - (உயர்நிலையிலிருந்து) (காமத்தால்) எளியவனாய் வீழ்ந்தவனே!; யார் முகத்தில் விழிக்கின்றாய்? - (இப்போது) யார் முகத்தில் விழித்துக் கொண்டிருக்கிறாய்?

இராவணன் சூர்ப்பணகையின் கணவனான வித்துருசிங்கனைக் கொன்றமை; "தன்னுடைய தங்கையாம் தடவரைத் தோட் சூர்ப்பணகை தன்னைக் கொண்ட மின்னனைய சுடரிலை வேல் வித்துருசிங்கன் தனை வெங்களத்து வீழ்த்தான்' (உத்தர. திக்கு விசய: 83) சூர்ப்பணகை பழி தீர்க்க முடிவெடுத்திருந்தமை, "நீலமா மணிநிற நிருதர் வேந்தனை மூலநாசம் பெற முடிக்கும் மொய்ம்பினாள், மேலைநாள் உயிரொடும் பிறந்துதான் விளை காலம் ஓர்ந்து உடன் உறை கடிய நோயனாள்" (கம்ப. 2739) என்பதனால் அறிக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. '"You killed my husband, your brother-in-law, whom you should never have killed" — with that in mind she plotted cruelty,
  2. that cruel sinner who gnawed her lip with her teeth; she has paid off her long, heavy debt of vengeance!
  3. The good and the wicked, those in hell and those in heaven, my lord — all of them
  4. are enemies to us. Whose face will you look upon now? You have been brought so low!'

What the poem says

Vīṭaṇaṉ blames their sister Cūrppaṇakai. Irāvaṇaṉ had once killed her husband, Vittucciṅkaṉ, in battle, and she, biting her lip, waited for her moment to avenge him by stirring up Irāvaṇaṉ's passion for Cītai. Now her revenge is complete.

Vīṭaṇaṉ laments that good and bad, the dwellers of hell and of heaven alike, are all now their enemies. To whom can his brother, brought so low by desire, turn his face?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘kollāta maittuṉaṉaik koṉṟāy “ eṉṟu atuk kuṟittuk koṭumai cūḻntu,
pallālē itaḻ atukkum koṭum pāvi neṭum pārap paḻi tīrntāḷē!
nallārum tīyārum narakattār tuṟakkattār, nampi! nammōṭu
ellārum pakaiñarē; yār mukattē viḻikkiṉṟāy? eḷiyai āṉāy!