கம்பராமாயணம் 9985 · யுத்த 36.224
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
போர்மகளை - வெற்றித் திருமகளையும்; கலை மகளை - கலைகட்குரிய நாமகளையும்; புகழ் மகளை - கீர்த்திக்குரிய மகளையும், தழுவிய கை - அணைத்த உன் கரமானது; பொறாமை கூர - பொறாமை மிகுமாறு; சீர்மகளைத் திருமகளை - சிறப்பு வாய்ந்த மகளான திருமகளை; தேவர்க்கும் தெரிவு அரிய - தேவர்களும் அறிய முடியாத; தெய்வக் கற்பின் பேர்மகளை - தெய்வத்தன்மை வாய்ந்த கற்பினால் பெயர் பெற்றவளான சீதா தேவியை, தழுவுவான் - தழுவும் ஆசையினால், உயிர் கொடுத்து - உயிரைக் கொடுத்து; பழி கொண்ட - பழியை வாங்கிய; பித்தா - பித்தனே! திசையானை பணை இறுத்த - திக்கு யானைகளின் கொம்புகளை ஒடித்த; பணைத்த மார்பால் - பெரிய மார்பினால்; பின்னை - பிறகு; பார்மகளைத் தழுவினையே - மண் மகளை அணைத்துக் கிடக்கின்றாயே!
திருமகளைத் தழுவ விரும்புவது கண்டு பிற தெய்வ மகளிரை அணைத்த பொறாமை மிக்கது என்க. பொறாமை கூர - பொறுக்க மாட்டாமை மிக எனினுமாம். பார் மகளைத் தழுவல் மண்ணைத் தழுவிக் கிடத்தல். போரிலும் கல்வியிலும், புகழிலும், மேம்பட்டு, இவற்றிற்குத் தெய்வங்களான அதி தேவதைகளை அணைத்து வாழ்ந்தாய். இவற்றோடு அமையாமல் திருமகளாகிய பிறர் மனையை அணைக்க நினைத்து, மண்ணை அணைத்து மாண்டனையே என்றழுதான் வீடணன். சோகச்சுவையைப் பிழிந்து வைத்திருக்கிற பாடல்களுள் இதுவும் ஒன்றாதல் காண்க. உயிர் கொடுத்தாகிலும் புகழை விரும்பிப் பெற வேண்டியதிருக்க உயிர் கொடுத்துப் பழி கொண்டதனால் "பித்தா" என்று அழுதான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'So that the goddess of war, the goddess of learning and the goddess of fame, whom your arms had embraced, burned with jealousy,
- to embrace the glorious one, Tirumakaḷ, the great lady of a divine chastity
- that even the gods cannot fathom, you gave your life and took disgrace, madman! And after that,
- is it the goddess Earth you embrace now, with that broad chest that broke the tusks of the elephants of the directions?'
What the poem says
One of the most moving verses of the lament. Irāvaṇaṉ had 'embraced' the goddesses of victory, learning and fame, mastering war, scholarship and glory. Not content, he wanted to embrace Cītai, Lakṣmī herself, whose divine chastity is beyond even the gods' understanding, and made those goddesses jealous.
For that he gave his life and won only infamy, which is why Vīṭaṇaṉ calls him a madman: a man should give his life for fame, not for disgrace. Now the great chest that broke the elephants' tusks embraces only the earth he lies on.