கம்பராமாயணம் 9988 · யுத்த 36.227
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இரக்கமும் தருமமும் துணைக்கொண்டு - தயையும் தருமமும் துணையாகக் கொண்டு; இன்னுயிர் புரக்கும் நன் குலத்து ஒருவன் - இனிய உயிர்களைப் பாதுகாக்கப் பிறந்த நல்ல குலத்துப் பிறந்த ஒருவனை; பூண்டதோர் பரக்கழி யான் என - (அவ்வாறு செய்யாமல்) மேற்கொண்டதொரு மிகு பழி பரந்து விரிவது போல; அரக்கியர் வாய் திறந்து அரற்றும் ஓதை - அரக்கிமார்கள் வாயைத் திறந்து கதறுகின்ற ஓசையானது; பரந்து நீண்டது - பரவி விரிந்தது.
உயர் குலத்துப் பிறந்தான் ஒருவன் செய்த பழிச் செயல் "மதிக்கண் மறுப்போல்" உலகமெங்கும் பரந்து தெரியும். அதுபோல் அரக்கியர் அழும் ஓசை உலகெங்கும் இராவணன் இறப்பு தெரியுமாறு பரவியது என்பதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like the infamy that spreads when one born into a good family,
- whose duty is to protect precious lives with compassion and dharma as his companions, takes on some disgrace,
- so it spread and stretched far and wide —
- the sound of the rākṣasa women wailing with open mouths.
What the poem says
The wailing of the rākṣasa women spreads across the world, the way a scandal spreads when someone from a noble family, born to protect life with mercy and righteousness, does something shameful. As the commentary notes, such a fault is as visible to everyone as the mark on the moon.