கம்பராமாயணம் 9990 · யுத்த 36.229

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அழைப்பு ஒலி முழக்கு எழ - அழைக்கின்ற ஒலி (இடி) முழக்கைப் போல் எழவும்; அழகு மின்னிட - அழகு மின்னல் போன்று மின்னிடவும்; குழை பொலி நல் அணிக்குலங்கள் வில்லிட - காதணி முதலிய அழகிய நல்ல அணிவகைகள் (வான) வில்போன்று ஒளிரவும், உழையொலி - மான்போல் திகழும்; உண்கண் - மைதீட்டப் பெற்ற கண்களிலிருந்து; நீர்த்தாரை மீது உக - கண்ணீர்த் தாரைகள் (மண்) மேலே விழவும்; மழைப் பெரும் குலம் என - மேகக் கூட்டங்கள் போல்; சிலர் வான் வந்தார் - சில மகளிர் வான்வழியாக வந்தனர்.

இராவணன் உடலைக் காண வந்த மகளிர் மேகக் கூட்டங்களாக உருவகிக்கப்பட்டனர். அவர்கள் கூவும் ஒலியே இடி முழக்கு. அழகின் ஒளியே மின்னல். ஆபரணங்களே வானவில். கண்ணீர்த்தாரைகளே மழைத்தாரைகள் என உருவகிக்கப் பெற்றுள்ளமை காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With the roar of their crying out rising, their beauty flashing like lightning,
  2. the clusters of fine jewels with their earrings arching like rainbows,
  3. streams of tears pouring down from their doe-like, kohl-lined eyes,
  4. some came through the sky like great masses of rain-clouds.

What the poem says

Other women come flying through the sky to see Irāvaṇaṉ's body, and the poet turns them into a storm. Their cries are thunder, their beauty is lightning, their earrings and jewels are rainbows, and the tears streaming from their doe-like eyes are the rain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aḻaippu oli muḻakku eḻa aḻaku miṉṉiṭa
kuḻaip poli nal aṇik kulaṅkaḷ villiṭa
uḻaip poli uṇ kaṇ nīrt tārai mītu uka
maḻaip peruṅ kulam eṉa vāṉ vantār cilar.