கம்பராமாயணம் 9993 · யுத்த 36.232
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வருத்தம் ஏது எனின் - (இந்த மகளிர்க்கு இது வரையில்) துன்பம் யாது என்றால்; அது புலவி - அது இராவணனிடம் நேர்ந்த புலவியேயாகும்; வைகலும் பொருத்தமே வாழ்வு என - நாடோறும் (அவன் மார்பில்) பொருந்தி வாழ்வதே வாழ்வாகும் என்று கருதி; பொழுது போக்கினார் - காலங்கழித்து வந்த அந்த அரக்கியர்; திருத்தமே அனையவன் - (இறைவன் படைப்பில் பலமுறை) திருத்திச் செம்மைப்பட்ட வடிவினைப் பெற்றவன் எனக் கூறத்தக்க வடிவினையுடைய இராவணனின்; சிகரத் தோள்கள் - தோள்களின் மேல், ஒருத்தர் மேல் ஒருத்தர் வீழ்ந்து - ஒருவர் மேல் ஒருவர் விழுந்து; உயிரின் புல்லினர் - (அவன்) உயிரைத் தழுவுவதுபோல் தழுவினர்
புலத்தலும் கலத்தலும் ஆகிய துன்ப இன்பங்களைத் தவிர வேறு துன்பமும் இன்பமும் அறியாத அரக்க மாதர், இன்றுதான் துன்பக் கடலில் மூழ்குவார் ஆயினர்: இராவணன் வடிவம் நான்முகனால் பன்முறை திருத்தித் திருத்தி, இறுதியில் செப்பமாக்கப்பட்ட பூரண வடிவென்பார் "திருத்தமே யனையவன்" என்றார். இனி "திருத்தமே அனைய வான் சிகரத் தோள்கள்" என்று திருத்தத்தைத் தோள்களுக்கு ஏற்றினுமாம். திருத்தம் என்பதனை, தீர்த்தம் எனும் வட சொல்லாகக் கொண்டு, இராவணன் தோள்கள் வீரந்தாங்கிய தீர்த்தத் துறை போன்றவையென்று முந்தைய உரையாசிரியர்கள் உரை கூறினர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- If you ask what sorrow they had ever known, it was only lovers' quarrels; every day
- they passed their time thinking union with him was life itself;
- now they fell one upon another and clasped, as if clasping his life,
- the peak-like shoulders of him who was perfection itself.
What the poem says
These women had never known any sorrow except a lover's sulk; their only joy had been union with Irāvaṇaṉ. Now, falling over one another, they cling to his shoulders as if trying to hold on to his life.
He is called 'perfection itself': the commentary explains that his form was like a work Brahmā had corrected again and again until it was flawless. Older commentators read the word as tīrttam, a sacred bathing place, so that his shoulders were a holy ford of valour.