கம்பராமாயணம் 9994 · யுத்த 36.233
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1இயக்கியர் அரக்கியர் உரகர் ஏழையர்
மயக்கம் இல் சித்தியர் விஞ்சை மங்கையர்
முயக்கு இயல் முறைகெட முயங்கினார்கள் தம்
துயக்கு இலா அன்புகண்டு எவரும் சோரவே.
பொருள் · Meaning in Tamil
இயக்கியர் அரக்கியர் - யட்ச மாதரும், இராக்கத மங்கையரும்; உரகர் ஏழையர் - நாகலோகப் பெண்களும்; மயக்கமில் சித்தியர் - மயக்கமற்ற சித்தசாதிப் பெண்டிரும்; விஞ்சை மங்கையர் - வித்தியாதர மகளிரும்; (ஆகிய) எவரும் - யாவரும்; தம் துயக்கிலா அன்பு மூண்டு - தம்முடைய தளராத அன்பின் முனைப்பால்; எவரும் சோர - அனைவரும் அறிவு சோர்ந்து; முயக்கியல் முறை கெட - தழுவும் முறையெல்லாம் தவிர்த்து; முயங்கினார்கள் - (இராவணன்) உடலைத் தழுவினார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Yakṣa women, rākṣasa women, women of the serpent race,
- Siddha women free of delusion, Vidyādhara maidens —
- they embraced him with all the customs of embrace forgotten,
- as their unfailing love blazed up and they all grew faint.
What the poem says
Women of every race Irāvaṇaṉ had gathered into his household mourn him: yakṣas, rākṣasas, nāgas from the serpent world, siddhas and vidyādharas. Overwhelmed by a love that has never faltered, they abandon all decorum and cling to his body until they faint.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iyakkiyar arakkiyar urakar ēḻaiyar
mayakkam il cittiyar viñcai maṅkaiyar
muyakku iyal muṟai keṭa muyaṅkiṉārkaḷ tam
tuyakku ilā aṉpu mūṇṭu evarum cōravē.