கம்பராமாயணம் 9996 · யுத்த 36.235

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தரங்கநீர் வேலையில் தடித்து வீழ்ந்து என
உரங்கிளர் மதுகையான் உருவின் வீழ்ந்தனள்
மரங்களும் மலைகளும் உருக வாய்திறந்து
இரங்கினள் மயன்மகள் இனைய பன்னினாள்.

பொருள் · Meaning in Tamil

மயன் மகள் - மயனின் மகளும் (இராவணனின் பட்டத்தரசியும் ஆகிய) மண்டோதரி; உரம் கிளர் மதுகையான் - மனத் திண்மை வாய்ந்த வலியவனான இராவணனுடைய; உருவின் - உடலின் மேல், தரங்க நீர் வேலையில் - அலையெறியும் நீரினையுடைய கடலின் மேல்; தடித்து வீழ்ந்தென - மின்னல் வீழ்ந்தது போல்; உற்றனள் - வீழ்ந்தவளாய்; மரங்களும் மலைகளும் உருக - (உருகும் இயல்பில்லாத) மரங்களும் மலைகளும் உருகுமாறு; வாய் திறந்து - வாய்விட்டு; இரங்கினாள் - அழுதவளாய்; இனைய பன்னினாள் - இத்தகைய மொழிகளைக் கூறினாள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like lightning falling upon the sea with its rolling waves,
  2. she fell upon the body of him whose strength was mighty in spirit;
  3. opening her mouth she wept, so that trees and mountains melted;
  4. Mayaṉ's daughter lamented and spoke these words.

What the poem says

Vaṇṭōtari, Mayaṉ's daughter and Irāvaṇaṉ's chief queen, throws herself on her husband's body like a flash of lightning falling onto the dark sea. Her cries are so piercing that even trees and mountains, which cannot melt, melt with pity. Her lament follows.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taraṅka nīr vēlaiyil taṭittu vīḻnteṉa
uram kiḷar matukaiyāṉ uruviṉ uṟṟaṉaḷ
maraṅkaḷum malaikaḷum uruka vāy tiṟantu
iraṅkiṉaḷ mayaṉ makaḷ iṉaiya paṉṉiṉāḷ.