கம்பராமாயணம் 9997 · யுத்த 36.236
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அன்னேயோ! அன்னேயோ! - அம்மா! அம்மம்ம!; கொடியேற்கு அடுத்தவாறு - கொடியவளான எனக்கு வந்துள்ள நிலைமையை என்னென்பது; அரக்கர் வேந்தன் பின்னேயோ இறப்பது - இராக்கதர் தலைவனாகிய இராவணன் இறந்த பின்னேயோ நான் இறப்பது? முன் பிடித்திருந்த கருத்து - முன்பு தொடங்கி நான் கடைப்பிடித்து வந்த கொள்கைகளில்; அதுவும் பிடித்திலேனோ? - அதையும் கைவிட்டு விட்டேனோ?; முன்னேயோ விழுந்ததுவும் முடித்தலையோ? - (அந்தத் தவற்றால்) எனக்கு முன்னாலே (என் கணவரின்) மகுடத் தலைகள் விழுந்தனவோ? படித்தலைய முகங்கள் தானோ? - மண்மேல் கிடப்பவை என் (உயிர் அனையானின்) தலைகள் தானோ? என்னேயோ? என்னேயோ? - என்னென்பேன் என்னென்பேன்?; இராவணனார் முடிந்த பரிசு இதுவோ பாவம் - (உலகைக் கலக்கிய) இராவணனார் வாழ்வு இத்தகையதாகவா முடியவேண்டும்! பாவம்! பாவம்!
தானோ - தாமோ. ஒருமை பன்மை மயக்கம். மனமொத்த கணவன் மனைவியர் ஒரு சேர உயிர் துறக்கவேண்டும். அல்லது கணவனுக்குமுன் மனைவி உயிர் துறக்க எண்ணுவது இந்நாட்டு மரபு, மூவுலகங்களையும் கலக்கி வென்றவனும் மண்ணின் மேல் தலை யற்று வீழ்ந்து மாள்வது தான் விதியோ! என்பாள். "இராவணனார் முடிந்த பரிசு இதுவோ பாவம்!" என்றாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Alas, alas! Ah, what has befallen me, wicked one that I am! Am I to die
- after the king of the rākṣasas? Could I not keep even the resolve I held before?
- Have his crowned heads fallen before me? Are these his faces lying on the ground?
- What is this, what is this, the way Irāvaṇaṉ has ended! Is this how it is? Oh, the pity of it!'
What the poem says
Vaṇṭōtari's lament opens. A devoted wife, she always meant to die before her husband or together with him, as tradition holds a loving wife should; now she has outlived him. She cannot believe that those crowned heads lying on the ground are his, or that the conqueror of the three worlds could come to such an end.