கம்பராமாயணம் 9999 · யுத்த 36.238
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஒருவன் சிலை துரந்த சரங்கள் - ஒப்பற்றவனான இராம பிரானுடைய வில் செலுத்திய அம்புகள்; ஆரம் போர் திருமார்பை - முத்து மாலைகள் அணிந்த அழகிய மார்பினை; அகல் முழைகள் என - விரிந்த குகைகள் போல; திறந்து - பிளந்து; இவ் உலகுக்கு அப்பால் - இந்த உலகைக் கடந்து அப்பால்; தூரம் போயின - வெகு தொலைவுக்குச் சென்று விட்டன; போரில் தோற்று - போரில் தோற்று; வீரம் போய் - வீரம் இழந்தும்; உரம் குறைந்தும் - வலிமையிழந்தும்; வரம் குறைந்தும் - பெற்ற வரமெல்லாம் இழந்தும்; வீழ்ந்தனையே - (போர்க்களத்தில்) வீழ்ந்து கிடக்கின்றாயே; இராவணனை ஓர் அம்போ உயிர் பருகிற்று? - இராவணனாகிய உன்னை (இராமன் விட்ட) ஓர் அம்பா உயிரையுண்டது? (நம்ப முடியவில்லை); மானுடவன் ஊற்றம் ஈதோ. - மனிதன் ஒருவனின் வலிமை இத்தகையதோ?
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Opening up his garlanded, sacred chest like wide caves, they went far off
- beyond this world — the arrows the bow of that one man shot. Defeated in battle,
- his valour gone, his strength reduced, his boons reduced, he has fallen! Ah, the change! I am ruined!
- Did a single arrow drink Irāvaṇaṉ's life? Is this the might of a man?'
What the poem says
Vaṇṭōtari sees the great holes the arrows have torn in her husband's chest before flying on beyond the world. Beaten, his courage, strength and boons all gone, he lies fallen. She cannot believe that a single arrow from a mere man could take Irāvaṇaṉ's life; the question leads to her realisation in the next verse.